அரிவாள்
அய்யனார்
முதுமையின்
தனிமை பயம்
கருமை
கழியும்
அவள்
வெண் நரை போல்
வளர்ந்து
கொண்டேயிருக்கிறது
அரசாண்ட
கால நினைவுகள்
ஊன்று
கோலாகிட
அதை
அழுத்திப் பிடித்து
பயத்தை
மறைத்த படியே
மீசை
முறுக்குகிறார் அப்பா
சிறகுக்குள்
மறைந்த
குஞ்சுகளின்
கதகதப்புக்காய்
உதிர்ந்து
கிடக்கும்
பாட்டியின்
அனுபவச் சிறகை
எரிக்கத்
தொடங்குகிறாள் அம்மா
புலிக்
குத்தி படையலில்
வந்து
சேராத சாப்பாட்டிற்கு
சண்டையடிக்கக்
கூட மறந்து
பழங்காலங்களை
பேசிச்
சிரித்து
மறைக்குது நிகழ் முதுமை
பறிபோகுமென்ற
பயத்தில் தான்
அரிவாள்
தூக்கி
சிலையானாரோ
அய்யனாரும்
நன்றி : ” குறி “இதழ்
|
Post a Comment