சூரியாள்

Wednesday, May 07, 2014
வாயை மூடி பேசவும் -திரை விமரிசனம்
வாயை மூடி பேசவும்
 எப்பவும் பேசி எதையும் தீர்த்து விட முடியும் என்று நம்புகின்ற எஃப் .எம்மில் வேலை தேடுகின்ற ஆண், எதிரில் இருக்கின்றவர்கள் பேசாமல் இருந்து விட மாட்டார்களா என்று விரும்பும் பெண்,இவர்களைச் சுற்றிச் சுழலும் கதை  அபத்தமான ,லாஜிக்கில் சிக்காத, வியாதியையும் , அதன் விளைவுகளாக எல்லாரும் பேசாமல் இருக்க நேருவதாகவும் காட்டும் போதும் அது சொல்லுகின்ற விசயம் ,பேசுவதற்கும் பேசாமல் இருப்பதற்கும் இடையில்  பல விசயங்களை திறமையோடு கையாண்டு வியாதி பற்றிய அபத்தத்தைச்  சின்னதாக்கிப் போயிருக்கின்றார்கள் மொழியின் பலத்தை விட மனத்தின் பலமே பெரிது, இதயம் சொல்லுவதை கேட்டு நடந்து விட்டால் எல்லாம் சுகமானதாக நடந்து விடும் விருப்பங்களை புரிந்து கொள்வது தான் சிறந்த மொழி இப்படி பல விசயங்களை கருத்துக்களை அழகான காட்சி மொழியால் சொல்லிப் போகின்றது படம் 
கமலகாசன் எடுத்த பேசும் படம் நினைவுக்கு வந்தது. ஆனால் அதில் யதார்த்தம் என்ற பேரில் பல காட்சிகள்அருவருப்பானதாய் இருக்கும், ரசிக்க முடியாதகவும் முகத்தை சுழிக்க வைக்கக் கூடியதாகவும் இருக்கும்.ஆனால் இப்படத்தின் காட்சிகளோ நமை சப்புக் கொட்டி ரசிக்க வைக்கின்றது  .தினமும் கதாநாயகியை பார்த்து ஊசி போட்டுக் கொள்ளும் நாயகன் மனதில் காதல் உணரப் படும் தருணமும் குழந்தை மூளையில் திணிக்காதீர்களென்று சொல்லும் பலூன் காட்சியும்  நல்ல உதாரணங்கள்
சிரித்தால் போதும் என்ற மனநிலையில் வரும் ரசிகர்கள், சிரிக்க வைத்து விட்டால் போதும் படம் ஜெயித்து விடும் என்று கதையையும் நாயகனையும் நம்பாது காமெடியனை நம்பி படமெடுக்கத் துவங்கியிருந்த  திரை நிறுவனங்களால் சினிமா உலகம் நிரப்பப் பட்டிருக்கின்றது.  அது அவர்களுக்கே சலித்து போயிருக்கக் கூடும்.  அல்லது அவர்களே சிரிக்க வைத்ததற்கிடையில் எதையாவது புதியதாய் செய்து விட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது  சிரிக்க வைப்பதற்கிடையில் எதையாவது செய்து விட வேண்டும் என்ற தேடலும் வந்து விட்டது கமர்சியல் நோக்க்கங்கள் தாண்டி
எல்லாம் சரிதான்
குழந்தைகள் விரும்புவது போல் அம்மாவும், காதலி விரும்புவது போல் காதலனும்மாறி. இன்னும் எத்தனை காலம்தான் பெண் கள் ஆண்கள் தயவோடவே தான் செயல்படமுடியும் என்று நிருவப் போகின்றார்கள்  . எழுத்தாளப் பெண் தன் விருப்பம்  சுயமாய் நிறைவேற்ற முடியாது கணவன் ஒத்துழைப்பு இருந்தால் தான் இயங்க முடியும் என்று சொல்லிப் போவது எந்த வகையில் நியாயம்
வர வர இளம் தலைமுறையினர் விரும்பிய படி நடக்க மூத்த தலைமுறை விட்டு விட வேண்டும் என்று சொல்லுவது சரி ஆனால் இடைப் பட்ட தலைமுறையின் பேச்சை அவர்களின் முத்தவர்களும் கேட்கவில்லை அவர்களின் இளையவர்களும் கேட்கவில்லை என்பது எவ்வளவு மோசமான நிலை. கடந்து வர வலிமையான இதயம் வேண்டும் இடைப் பட்ட தலைமுறைக்கு 

வாயை மூடி பேசவும் , நிறைய பேசப் பட வேண்டிய  நல்ல படம்
posted by Thilagabama M @ 5/07/2014 01:35:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates