சப்த வீடுகள்
எந்த அறைக்குள் போய்
கதவடைத்த பின்னரும்
அழுத்தப் பட்ட குக்கரின்
இயலாமைச் சப்தம் கேட்டுக் கொண்டே
இருக்கின்றது.
தூக்க மாத்திரைகளோடு தூங்க நேர்ந்த கணவன்கள்
திறக்க மறுத்த இருதய
வாழ்வுகளுக்காக
விழிகள் மூடி கொள்ள நேர்ந்த மனைவிகள்
எதுவாயிருந்தபோதும்
அவன் அழுத்தங்கள் அவள் முதுகிலும்
அவள் அழுத்தங்கள் அவள் மார்பிலுமாக
தாங்காது அழுத்தம் மீறும் சப்தம்
கொலுசொலி தாண்டியும் கேட்ட படியே
இருக்கின்றது
சப்தங்கள் முன்னெச்சரிக்கை என்பதை மறந்து
சப்தங்களிலாலேயே இயங்கத் தொடங்குதிந்த
வீடுகள்
நன்றி கல்கி
|
Post a Comment