சூரியாள்
|
Tuesday, March 16, 2010 |
வெங்கட் சாமிநாதன் மனைவி சரோஜா மறைநதார் |
வெங்கட் சாமிநாதனின் மனைவி சரோஜா, 2010 மார்ச் 15 அன்று இரவு, சென்னையில் மாரடைப்பினால் மறைந்தார். அவருக்கு வயது 73.
சீர்காழி அருகில் கடவாசல் (குடவாசல் இல்லை) என்ற ஊரில் பிறந்த இவர், தம் திருமணத்திற்கு முன்பு, அரசுத் துறையில் எழுத்தராகச் சிறிது காலம் பணிபுரிந்தார். 1966இல் வெங்கட் சாமிநாதனை மணந்த இவர், அவருடன் தில்லியில் நீண்ட காலம் வாழ்ந்தார். இவர்களுக்குக் கணேஷ் என்ற மகன் உள்ளார்.
வெங்கட் சாமிநாதன் ஓய்வு பெற்ற பின் சென்னை திரும்பிய இவர், மடிப்பாக்கத்தில் வாழ்ந்து வந்தார். திருமதி சரோஜா, வெங்கட் சாமிநாதனுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆணிவேராகத் திகழ்ந்தார். மெல்லிய தேகமும் மென்மையான குரலும் கொண்ட இவர், தம் காலம் முழுதும் ஓய்வறியாது உழைத்தார்.
திருமதி சரோஜா அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தகவல்: அண்ணா கண்ணன் |
posted by mathibama.blogspot.com @ 3/16/2010 10:05:00 am   |
|
|
Thursday, March 04, 2010 |
தென்றல். காம் |
http://www.tamilonline.com/thendral/subcontentnew.aspx?id=112&cid=2&sid=2
http://www.tamilonline.com/thendral/channels/writer/writer.aspx?Page=1
நன்றி தென்றல்.காம் |
posted by mathibama.blogspot.com @ 3/04/2010 08:17:00 pm   |
|
|
|
|
 |
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|