சூரியாள்

Sunday, March 22, 2009
கவிதையில் படர்ந்த மிளகுக் கொடிகள்
கட்டுரைத் தொகுப்பின் முன்னுரை
கானல் காடும் -கவிதையும் ஒன்றான தினத்தின் வாசிப்பு

தி. க.சிக்கு சாகித்ய அகாதமி பரிசு கொடுக்கப் பட்டதற்கு நடந்த பாராட்டு விழா எனத் துவங்கிய பாரதி இலக்கியச் சங்கம் மெல்ல மெல்ல தன் கிளைகளை வெவ்வேறு திசைகளில் வியாபித்துக் கொண்டது மாதம் ஒரு முறை படைப்பரங்கம் சந்திப்பு எனத் தொடர்ந்த அதன் செயல்பாடு ஒரே மாதிரியான தொடர் நிகழ்ச்சியாக என்றுமே அமையாமல் போய் ஒவ்வொரு நிகழ்வும் வேறு வேறு மாதிரி தன்னை வடிவமைத்துக் கொண்டது என் படைப்புகளைப் போலவே. அவ்வப் போது வாய்க்கின்ற சந்தர்ப்பங்களில் எனது நூறு சதவீத உழைப்பும் ஆர்வமும் இருக்க படைப்பரங்கங்கள் கருத்தருங்குகளாகி, கல்லூரி நிகழ்சிகளாகி,பயிற்சிப் பட்டறைகளாகி, பரிசளிப்பு நிகழ்வுகளாகி ,2003 இல் கடனாவிலிருந்து இணையம் வழியாக கணிணி வழி ஏற்புரை கவிஞர் திருமாவளவன் நிகழ்த்திட தொலை தொடர்பையும் முழுக்க பயன் படுத்திக் கொண்ட முதல்முக்கிய இலக்கிய நிகழ்வுமாகி கானல் காடு கருத்தரங்காகி இப்படியாக இதன் நகர்தல் செயல்பாடு.

கானல் காடு கருத்தரங்கு
இருந்து இல்க்கியம் பேசுகின்ற அமைப்புகள் நமக்கு புதிதல்ல .செல்லப்பா வத்தலக்குண்டில் எழுத்தாளர்களையெல்லாம் அழைத்து தங்க வைத்து , தங்குவதற்கு வீடுகள் ஏற்பாடு செய்து ராஜமய்யர் நூற்றாண்டு விழா நடத்திய காலம் தொட்டு பல்வேறு பட்ட தரப்பினரும் தொடர்ந்து நடத்தி வருவது தான்
மாலன் தான் ஒரு முறை பேசிய பேச்சின் ஊடாக இருநாள் கருத்தரங்கம் நடத்தினால் என்ன? என்று கேட்டு வைக்க
எனது இலக்கிய நண்பர்கள் சுசீந்திரனும் ,வ.ஐ.ச.ஜெயபாலன் என்னோடு என் தாய் வீட்டுக் காப்பித் தோட்டங்களுக்கு வந்திருந்தபோது காடுகளோடு நெகிழ்ந்தது நினைவுக்கு வந்தது. நான் நெடுக காட்டோடு வளர்ந்ததால் என் வாழ்விலும் எழுத்திலும் அதனுடைய மண் வாசம் கண்டு அவர்கள் பிரமித்த போதுதான் காடுகள் எனக்குள் என்ன மாற்றம் செய்திருக்கின்றன என உணர்ந்திருந்தேன்.அங்கேயே நிகழ்வு நடத்தினால் என்ன ? கேள்வி எழுந்தது. அவ்வளவு தூரத்தில் எந்த வித அடிப்படை வசதியுமில்லாத இடத்தில் நடத்துவது சாத்தியமா? எல்லாம் சரியாகத் திட்ட மிட முடியுமா உங்களால்? எப்பவும் போல் பெண்ணால் தனியாகச் செயல் பட்டு விட முடியுமா எனும் கேள்வியை இப்பவும் எனைச் சுற்றி இருந்தவர்கள் அன்பில் பேராலேயே கேட்டனர்.
ஏன்?
கேலிக்கூத்தாய் ஆக்கிடாதீங்க ? அன்போடு(?) சொன்னார்கள்
எப்பவும் போல் என் திட்டமிடுதல்கள் தேவையை முன்னிறுத்தி எழும்ப அதில் தவறு வருவதற்கு சாத்தியமே இல்லை
முதல் கருத்தரங்கை பற்றி மாலனும் நானும் தொடர்ந்து பேச நிகழ்வு வடிவம் பெற்றது சமீப காலமாக என் கவனத்தில் வர நேர்ந்த இலக்கியச் சந்திப்புகள்
" குடிப்பதற்காக எனவும், வேறு பல ஒன்று கூடுதலுக்காகவும் என மாறிப் போனதை உணர நேர்ந்த போது நிகழ்வின் ஒரு ஒழுங்கு கண்டிப்பாக இருக்கவும் என் கைப்பிடிகளுக்குள் நிகழ்வின் போக்கு இருப்பதற்கும் சேர்த்தே திட்டமிட்டேன்.யாரிடமும் நிகழ்வுக்கான பங்கேற்பு கட்டணம் வாங்க மனம் இடம் தரவில்லை. காரணம் பங்களிப்பு செய்து விட்டு ஆக்கிரமிக்கவும் சுதந்திரம் என்று எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று கூவவும் தயாராக இருக்கும் ஒரு சில நவீன இலக்கியவாதிகளிடமிருந்த அணுகுமுறை தந்த அனுபவம்.
" மதுபானங்களுக்கு அனுமதியில்லை" என்று போட்டதனால், ' இவசொல்படி நாம கேட்கனுமா என்று வராமல் தவிர்த்தவர்களும் வந்து விட்டு இரவில் தவிர்க்க முடியா காரணம் சொல்லி திரும்பியவர்களும் இருந்தார்கள்.

பட்டி வீரன் பட்டியில் ஒரு பொது நிகழ்ச்சி அடுத்த ஒன்றரை நாளும் படைப்பாளிகளின் ஆத்மார்த்த உரையாடலோடு கூடிய சந்திப்பு என நிகழ்வு நடந்து முடிந்தது.

முடித்து அந்நிகழ்வை விட்டு விலகி ஐரோப்பாவில் நான் பயணப் பட்ட போது அந்நிகழ்வின் அழுத்தமான வாசம் எல்லார் நினைவிலும் நிற்கக் கண்டேன்.அதற்கு முக்கிய காரணம் நிகழ்வை ஒன்று விடாமல் பதிவு செய்து ஒலிப்பதிவை எழுத்துப் பதிவாக மாற்றி மாலன் இணைய இதழ்களில் வலம் வர விட்டது.
அந்நிகழ்வின் முக்கிய நகர்வுகளாக நான் கண்டது
1 , சுயமரியாதை இயக்கத்திற்கு பிறகு ஏறக்குறைய கட்டி தட்டிய மனோநிலைக்கு வந்து விட்ட பட்டி வீரன் பட்டி கடந்து வந்த பாதையின் பெருமையைப் பேசியதால் நிகழ்ந்த அசைவு
2, மாலன் வார்த்தையூடாக" இந்த இடம் எல்லாருக்குள்ளும் இருந்த " நான்" ஐ அழித்து விட்டது"
3, கருத்தியல் ரீதியான வேறுபாடு படைப்பாளியிடத்தில் வெறுப்பாக மாறாமல் எல்லாருக்குள்ளும் இருந்த இறுக்கம் தளர்ந்து மென்மையானது.(இது அடுத்த படைப்பூக்கத்துக்கு நல்லது
4, பிரம்மராஜன் வார்த்தையூடாக" நல்ல வேளை குடி அனுமதிக்கப் படவில்லை .எல்லாரும் சுய நினைவோடு பேசியதும் நன்றாகவே இருந்தது".
5, இந்த செடிகள், மரங்கள் பூமிக்களித்து போல் நாம் ஒன்றையும் இதுவரை செய்யவில்லை இன்னமும் " கூட்டத்தில் ஒருவரிடமிருந்து கேட்ட வசனம் பலரது இயல்பை உணரச் செய்திருந்ததை உணர்த்தியது
6, இந்திரன் வார்த்தையூடாக " இந்த நிகழ்வில் எடுத்த புகைப்படம் இனி ஒரு முறை வாய்க்குமா தெரியாது.பல தரப்பட்ட நபர்கள் ஒன்றாக இருக்கும் படமிது"

எல்லாவற்றிற்கும் மேலாக தொடர்ந்து பலர் கேட்டனர். அடுத்த நிகழ்வு எப்போது? எங்களுக்கும் அழைப்பிருக்குமா?
எனது பொருளாதாரம் லட்சுமி அம்மாள் உடல் நிலை எனது எழுத்து இவையெல்லாம் மீண்டும் இது போன்ற நிகழ்வுக்கு யோசிக்க விடவில்லை.

இரண்டாவது கருத்தரங்கு
இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்றைய இலக்கியத் தேவையை முன்னிறுத்தி கவிதையில் புனைவுக்கும் நடப்பியல் யதார்த்தத்திற்குமான இடைவெளி அல்லது தொடர்பு விவாதப் பொருளாக முன்னிறுத்தப் பட்டது. பிரம்மராஜன் முதலிலேயே சொன்னார் இந்த முறை கட்டுரைகளாக எல்லாரும் தரச் சொல்லுங்கள் திலகபாமா . பின்னர் தொகுப்பாக்கும் போது நல்ல பதிவாக இருக்கும் என்று சொன்னது நல்ல விசயமாக பட்டது. இதோ இன்று நம் கைகளில் சமகால கவிதைப் போக்குகளை பல்வேறு தரப்பினரும் (இன்னும் பல தரப்புகள் இருக்கின்றது என்றாலும்) அவரவர் ரசனைக்கேற்ப கோட்பாடுகளுக்கேற்ப வாழ்க்கைக் கேற்ப தந்த கட்டுரைகள். அடுத்து சமீப காலப்பெண்ணிய அரசியலுக்கு ஆண்டாளும் தோள்சீலைப் போரட்டமும் வலுவில் இழுக்கப் பட்டு பயன்படுத்தப் படுவது வருத்தம் தர அது பற்றிய சரியான வரலாற்றுப் பார்வை பேசப் பட வேண்டும் என்று தோன்றியதன் விளைவே தோதாத்ரி அவர்களது ஆண்டாள் பற்றிய உரையும், தோள் சீலை போராட்டம் பற்றிய விவாதமும், தோள் சீலை போராட்டம் பற்றிய விவாதத்தை துவங்கி வைத்த பேராசிரியர் கட்டுரையாக கடைசி வரை ஆக்கித் தராததால் அக்கட்டுரை விடுபட்டிருக்கின்றது. அந்நிகழ்வுக்கு வந்திருந்த இன்னும் சிலரும் கட்டுரை தரவில்லை எனவே அவர்கள் பெயர் விடுபட்டிருக்கின்றது
நிகழ்வு முடிந்த பிறகு ஒவ்வொருவரும் கடிதம் எழுதியிருந்தார்கள் . தொலைபேசியில் நிகழ்வு பற்றி பகிர்ந்து கொண்டார்கள்
ஆய்வு பட்ட மாணவ மாணவிகள் தங்களது மாணவனின் கவிதை வாசிப்புத்தான் பெரும் விவாதத்திற்கு வழி வகுத்தது எனவும்
பா.வெங்கடேசன் , பழனிவேளும் பிரம்மராஜன் கட்டுரை ஒன்றே இந்நிகழ்வின் வெற்றி எனவும்
பழமலய் ஆண்டாள் பழங்குடி நாட்டவராக இருக்கலாமோ எனத் தெரியக் கிடைத்த நிகழ்வு என்பதால் மகிழ்ச்சி என்றதும்,
இப்படி இந்நிகழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் முக்கியமானதாய் கருதப் பட்டதே அந்நிகழ்வின் நிறைவாக எனக்குமாகியிருந்தது
இறுதியில் பட்டி வீரன்பட்டியில் சௌந்திர பாண்டியனாரில் சமாதியில் சில மணித் துளிகள் நின்றதும் மகிழ்வே
இதைப் போல் அடுத்த வருடமும்?
"போலச் செய்வது சாத்தியமில்லை எனக்கு எப்பவுமே"
தொகுப்பைத் திட்டமிட்ட போது எனக்கு நேரக் கெடுபிடியில் அமிர்தம் சூர்யாவை செய்து தர முடியுமா எனக் கேட்க மகிழ்வோடு செய்து தந்திருக்கிறார். நானும் ஒருகட்டுரை ஆசிரியராக இந்நிகழ்ச்சி வடிவமைத்தவராக சில உணர்வுகளை இதில் பகிர்ந்திருகின்றேன்.
கவிதையென்பது வாழ்க்கை-திலகபாமா
கவிதையின் இயற்பெயர் புனைவு-அமிர்தம் சூர்யா
கவிதையென்பது யாதெனில் கவிதை:
கவிதையென்பது உணர்வின் பெரு நதி- தமிழ் மணவாளன்
கவிதை தீர்மானங்களுக்குள் சிக்காதது-எழிலரசு
வலியின் ஒலி கவிதையென்றாகின்றாது;
கவிதை ஒரு கைவாளாகின்றாது- அம்சப் பிரியா

எத்தனை வார்த்தைகளில் சொல்லப் பட்டாலும், காடும் கவிதையும் ஒன்றான தினத்தின் வாசிப்பினூடாக கவிதை உணரப் பட்டிருக்கிறது. அதுவே நிறைவு

Labels:

posted by Thilagabama M @ 3/22/2009 07:05:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates