சூரியாள்
|
Tuesday, July 31, 2012 |
விடியல் சிவா |
·
பெயரிடப் படாத நட்சத்திரங்கள் என்ற கவிதை தொகுப்பை சிவகாசியில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வெளியிட றஞ்சி ஆர்வம் தெரிவித்த போது அதன் பிரதிகள் 50 அனுப்பியிருந்தார் விடியல் சிவா. இலக்கிய மாநாட்டின் மாலைப் பொழுதில் அப்புத்தகம் மாலன் பொன்னீலன் தமிழச்சி அன்பாதவன் என பலர் முன்னிலையில் வெளியிடப் பட்டது . பொன்னீலன் அன்பாதவன் போன்றோர் அன்னூலை பற்றி விமரிசனம் செய்தார்கள். இப்புத்தகத்தை யாரும் இலவசமாக பெற்றுக் கொள்ளக் கூடாது இதற்கான விலையை செலுத்துவது அதற்கான மரியாதையை அளீக்கும் என்று சொன்னேன். எல்லாப் புத்தகங்களும் விற்றுத் தீர்ந்து விட்டன
·
உடனடியாக அந்த புத்தக காசை 5000 விடியல் சிவாவிற்கு அனுப்பினேன். அவர் தொலைபேசினார். இன்று வரை அவரை நேரில் சந்தித்த தில்லை. புத்தகத்திற்கான கழிவுத் தொகை எடுத்துக் கொள்லாமல் அவ்வளவு காசையும் அனுப்பி விட்டீர்களே என்றார். புத்தகத்திற்கான காசு அது. எனக்கெதற்கு என்று நான் சொன்னப் புறமும், அந்த 1500 மதிப்பிற்கான புத்தகங்களை அனுப்பித் தந்தார் உடனடியாக இந்த காலத்தில் இப்படி ஒரு பதிப்பாசிரியரா? என்று வியந்து போனேன். என் துரதிர்ஷ்டம் அவரை பார்க்காமலேயே காலம் முடிந்து விட்டது. அவரது ஆன்மசாந்திக்கும் , அன்னாரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்
|
posted by mathibama.blogspot.com @ 7/31/2012 07:56:00 pm   |
|
|
|
|
 |
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|