சூரியாள்

Monday, November 14, 2011
காரைக்கால் அம்மையார்களும், கல்பனா சாவ்லாக்களும் 1
காரைக்கால் அம்மையார்களும் , கல்பனா சாவ்லாக்களும்
நன்றி பாவையர் மலர்
இது கா னாவிற்கு, க வன்னா போட்டு எழுதும் எதுகை சாதுர்யம் அல்ல.
திலகபாமா
பெண்ணியமும் பெண் குறித்த உரையாடல்களும் பேசிப் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கின்ற இன்னேரத்தில் நான் சந்தித்த நாடு கடந்த பெண்களுக்கிடையேயும் நம்மூர் கமலாவும் கருப்பாயியையும் துருக்கி இளவரசியின் கதைகளில் காண நேர்ந்த அனுபவத்தை பேசுகின்ற தொடரிது
உற்று வாசியுங்கள் இதற்குள் நீங்களும் நான் வைத்த பெண்ணின் பெயரில் உலாவரலாம் , சம்பவங்களில் பெண் இருப்பு தொலைவதை காட்சிகளாக்கி பேசுகின்ற தொடரிது.
வாசிப்பில் மறைக்கின்ற வெளிச்சங்கள்
லட்சுமிஅம்மாள் ஒரு பெண் போராளி என்று நான் சொன்னால் யார் நம்பக் கூடும். ஆயுதம் ஏந்தினாரா? கோரிக்கைகளுக்காக போராட்டங்கள் நடத்தினாரா? அவரின் போராட்டங்கள் எதில் பதிவாகியிருக்கின்றது என்கின்ற கேள்வி உங்களது முன்னால் எழும்பக் கூடும்.
இது எங்கள் பொது புத்தியிலிருந்து எழும்பி வருகின்ற கேள்வி
ஆண் தீர்மானித்த வரையரைகளுக்குள் சிக்காமல்தான் எப்பவும் பெண்ணின் வெளி இயக்கிக் கொண்டிருக்கின்றது. அதனாலேயே அவள் சாதாரணமானவளாக எவ்வளவு பிரம்மாண்டங்களோடு இருந்தாலும் பார்க்கப் பட்டு விடுகின்றாள் அதற்கான சின்ன வலுவான உதாரணம் லட்சுமி அம்மாள்
யார் அந்த லட்சுமி அம்மாள் ?
பலருக்கு அவர் சி. கனசபாபதியின் மனைவி
இடது சாரி சிந்தனையாளர்களுக்கு அவர் ஒரு முற்போக்கு வாதி
அவ்வளவுதான். இன்று எத்தைனையோ இலக்கியவாதிகளின் மனதில் இருந்தாலும் வெடித்து முடிந்த அமைதியான எரிமலையின் சாட்சியங்களற்ற தடம் மட்டுமே
ஆனால் அம்மாவின் விஸ்வரூபம் குறுக்கப் பட்ட இடம் ஒன்றுண்டு எனறாள் அது சமூகப் பார்வையில் குடும்பப் பெண்ணுக்கான இடம்
ஏன்?
ஒரு சம்பவம், அதற்கு முன்னால் அம்மாவைப் பற்றி சில வரிகள்
புதுக் கவிதை விமரிசகராண சி . கனசபாபதியின் மனைவியாவதற்கு முன்பிருந்தே இடது சாரிக் கொள்கைகளில் தீவிரப் பற்றுடையவராய் இருந்த இவர் ராஜபாளையத்துக் காரர்.படிப்பாளி, சீன இலக்கியங்களை மொழி பெயர்க்கும் ஆற்றலுடையவர். இடது சாரிச் சிந்தனையாளேயே ஜீவாவுடன் கூட நெருங்கிய தொடர்பிலிருந்தவர்.இலக்கிய அழகியலையும் ரசிக்கக் கூடியவராக இருந்ததால், பாரதி தாசன் தொடங்கி புதுமைப் பித்தன், செல்லப் பா, லா சாரா என பல்வேறு படைப்பாளிகளோடும் நேரடித் தொடர்பிலிருந்த ஆளுமையான பெண். சி கனகசபாபதியை கரம் பிடித்தது கூட ஒரு மிகப் பெரிய புரட்சிதான். இரண்டாம் தாரமாக தனது அக்காள் கணவருக்கே வாழ்க்கைப் பட குடும்பம் நிர்பந்தித்த போது துணிந்து நின்று அதை எதிர்த்து மார்க்ஸிய பார்வையாளர் என்ற ஒரே காரணத்துக்காகவே சி. க வின் கரம் பிடித்தவர். கரம் பிடித்தவர் வாழ்வில் சிறப்பாக வரவேண்டும், அது தன் வெற்றியாகப் பார்க்கப் படும் என்று உணர்வு வந்தபோது அவரை முன்னிறுத்தி தான் பின்னாடி நின்று சமையல் கட்டோடு கரைந்து போகாமல் அவரோடு இணையாக நடந்ததே பெரிய புரட்சியும் போராளித் தனமும்தான். ஆனால் நாமெல்லாம் அதை போராளித் தனமாக வாசிக்க மாட்டோமே. யாரோ சிலரின் உணர்வு பேச்சுக்களுக்கு இரையாகி அவர்களஹ்டு வெற்றிக்கான படிக்கட்டாக தன்னை தன் உயிரை பலியாக்குவதை மட்டுமே போராளித் தனங்களாக பார்த்துக் கொண்டிருக்கின்ற நமக்கு குடும்ப அமைப்பில் உறுத்தாமல் வ் என்று வந்த லட்சுமி அம்மாள் போராளியாக தெரியாமல் போவது பொதுப்புத்தி வாசிப்பு அல்லாது வேறென்ன
அவரோடு இருந்த நாற்பது ஆண்டு கால இலக்கிய வாதிகளைப் பற்றி பதிவு செய்ய முயன்ற போது தான் அவரது ஆளுமை புரிந்தது 60 களில் ஒரு ராஜபாளையத்தைச் சேர்ந்த பெண் இயக்க ஆளுமையான ஜீவாவோடும், இலக்கிய ஆர்வலரான லா.சாரா வோடும் நெருங்கிய தொடர்பிலும், ரஷ்ய மொழி இலக்கியங்களை மொழிபெயர்த்துதரச் சொல்லிக் கேட்கும் திறமையோடும், முதல் விமரிசனம் என் கதைகளுக்கு நீதான் என்று சொல்லும் படியான வாசிப்பனுபவமோடும் இருந்திருந்தார் என்று அறிய வந்த போது ஆச்சரியமாக இருந்தது ஆனால் எந்த இடத்திலும் தன்னை ஈர்த்த பெண்ணை பற்றி உச்சரித்து விடாது அத்தலைவர்களும் இருந்திருக்கிறார்கள் என்று யோசித்த போது, இன்னுமொரு சம்பவமும் நினை வுக்கு வருவதை சொல்லாமல் இருக்க முடியவில்லை ஒரு முறை என்னோடு மதுரையிலிருந்து சென்னை வரை இரயிலில் பயணம் செய்த நண்பர் சென்னை வந்திறங்கியதும் நான் என் வழக்கமான தங்குமிடத்திற்கும் அவர் தனதான தங்குமிடத்திற்கும் சென்று விட்டோம். இருவர் வேலைகளும் தனித் தனியானவை . முடித்து விட்டு புத்தக கண்காட்சிக்கு நான் சென்றபோது, தன் நண்பர்கள் குழாமோடு இருந்த அந்த நபர்
ஓ திலகபாமா வா எப்போ வந்தீங்க என்று கேட்டாரே பார்க்கலாம்
நான் சிரிப்பை அடக்க முடியாது அந்த இடத்தை விட்டு நகன்று விட்டேன்.
அதே நிகழ்வை இருபது வருடம் கழித்து இளமையெல்லாம் தொலைந்து தள்ளாமையில் இருவரும் சந்தித்து கொண்டபோது அதன் சாட்சியமாய் நானிருந்தேன். அம்ம அவரது எழுத்தாளுமைகளை பற்ரி சொல்ல சொல்ல, அவரோ ஒரு வார்த்தை கூட அம்மாவின் வாசிப்பு விமரிசனம் பற்றி யெல்லாம் கூட பேசாது நீ நல்ல சமைப்பையேடியம்மா என்றேரே பார்க்கலாம்
எனக்கு அன்று சிரிப்பு வரவில்லை, கோபம் வந்தது.அவரின் தள்ளாமையில் கோபத்தை காண்பிக்க முடியாத புரிதலோடு மௌனமாக வெளி வந்து விட்டேன்.
இவர்களோடு என்ன புரிதலோடு நட்பு வைத்துக் கொள்ள முடியும் என்று சலிப்பாக வந்தது. அன்று இருந்திருந்த லட்சுமி அம்மாளின் விஸ்வரூபத்தை எவ்வளவு சின்னதாக்கி வாசித்து விட்டு விடுகின்றீர்கள் என்று தெரியவந்தபோது,
பெண்ணின் வெற்றியை வாசிப்பில் மறைக்கின்ற வெற்றிகளாகவும் , மறைக்கப் பட்டு விடுகின்றபோது அது தொல்விகளாக கரைந்து போய் விடுவதையும் உணரமுடிகின்றது.
சரி குடும்பத்திற்குள் இருந்தவளைத்தான் நாங்கள் ஒத்துக் கொள்வதில்லை அவளது வாழ்வு எவ்வளவு போராட்டத்துடன் வாழப் பட்டதாயினும் அது போராட்டமென்றோ அல்லது அவள் போராளி என்றோ இச்சமூகம் வடிவமைத்த மனிதர்களாய் வாழும் நாம் யாரும் ஒத்துக் கொள்வதாயில்லை. அது தனி மனிதத்துவம் சார்ந்த வாழ்வியலாகவே பார்க்கப் பட்டு விடுகின்றது

Labels:

posted by mathibama.blogspot.com @ 11/14/2011 09:28:00 pm   0 comments
Friday, November 04, 2011
தனிமையில் ஒற்றை நிலவு, சிறுகதை

தனிமையில் ஒற்றை நிலவு

தாலிகள் விதவிதமானவை. எல்லாரும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஆண்கள் தூக்கிப் பிடித்த சாதியத்திற்கேற்ப தாலிகள் உருவாயிருக்கிரதென்று. இல்லை இல்லை . கொல்லன் கை பிடித்து நெருப்பில் வெந்து அச்சுப் பதிக்கப் படுவதல்ல தாலிகள். பெண்ணின் எண்ணத்தில் கனலாகி , நினைவில் விழுந்திருக்கும் வாழ்க்கையின் அச்சுப் பதியலாகி ஆளுக்கொரு தினுசாய் கழுத்தில் கிடக்கின்றன.

தாலிகள் எல்லாப் பெண்கள் கழுத்திலேயும் ஏதாவது ஒரு ரூபத்தில் கிடக்கின்றன. கணவர்களால் பூட்டப் பட்டிருக்கின்றன. அவர்கள் தேடுகின்ற நேரம் மட்டும் பூக்களாக உயிர்த்திருக்கச் செய்து விட்டு மிச்ச நேரங்களில் கல்லாக உறைந்து விட வரம் தந்ததாய் பெருமை பேசிக் கொண்டிருந்தன.. கல்லாக இருந்து இருந்து இறுகிப் போன மனம் தேடுகின்ற நேரம் அல்லது தொடுகின்ற நேரத்தில் பூத்து விடச் சாத்தியமற்று இறுக்கத்தின் வலியை உணரட்டும் என்று மகரந்தங்களை பாறையாகவே வைத்து பூவிதழ்களால் சூடித் தருகின்றன. தான் நினைத்த வாசம் வீசுவதாக மகரந்தங்கள் மூடிக் கிடந்த போதும் உரத்து பெருமை பேசித் திரிகின்றன.எப்பவாவது வாய்க்குமா? என் கனவு பொழுது போல, அதில் நான் விரும்பும் என் காதலன், பூவாக்கப் பட்டான் என் தொடுகையில், என்னோடு கூந்தலில் எப்பவும் இருக்கின்றான் மாலை நேரத்து பெண் கூந்தல் மலர் தாங்குவது என் அடையாளத்திலா? னான் விரும்புகின்ரபோது அவன் ஆணாகி என் காதலனுமாகினான், மீண்டுமொரு பொழுதில் பூவாகி என் கூந்தலிலேகினான்.அவனென் கழுத்தில் தாலி பூட்ட முடியா காதலனுமாகினான்.

கழுத்தில் இல்லாத தாலி பற்றி தனக்குள் ஏன் இவ்வளவு நெடிய சிந்தனைகள். யோசித்தபடி சிரித்துக் கொள்கின்றாள். தாலி என்றதுமே நெடிய சிந்தனைக்குள் கனவுக்குள் மூழ்கி விடுகின்றாள் மடிப்புக் கலையாத அந்த மேலாடையின் மேல் கல்லூரி காலங்களில் ஆடிய நீள சங்கிலி நினைவுக்கு வருகின்றது. அப்பவும் அவளைப் பார்த்தவுடன் அந்தச் சங்கிலி பற்றிப் பேசுபவர்களுக்கு அவரவர்கள் விரும்பும் பதில் தந்தாள். ஆம் எதிர்படும் ஆசிரியை ஒரு நாள் கேள்வி கேட்கின்றார்.

“அழகா வித்தியாசமா இருக்கே இந்த டாலர். எங்க செய்தது?”.

“செய்ததிலே ஒன்றும் பெரிய விசயமில்லை. அந்த வடிவத்தை வரைந்து கொடுத்தது என் அம்மா. இன்னொன்று இது போல் கண்டிப்பாக இருக்காது”.

ஆசிரியை யோசித்தபடி சிரிப்பை வீசி விட்டு நகருகின்றார். அவருக்குள் இவள் நிஜமாகவே பணிவாக உண்மைத் தகவலைத் தந்திருக்கிறாளா இல்லை கிண்டலடிக்கிறாளா?

எதிரே கண்டதும் ஏன் பெண்களூக்கு ஆபரணங்கள் தான் பட்டுத் தொலைக்கின்றது. இன்னமும் அதைத் தாண்டிய அவள் அறிவும் ஆளுமையும் காணத் தர முடியாததாக அவளும் வைத்திருக்கிறேளா. இல்லை கண் முன்னே அது தெரிந்தாலும் இதுவரை அதன் சுயத்தை தன் வழியில் அனுபவித்திராதவர்களுக்கு அது உணர்வாகிடவே போவதில்லையோ , சந்தனக் காட்டை உணர்ந்து விடாத விறகு வெட்டியாய்

யோசனைகள் அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது

குறை சொல்லவும் மனமின்றி அவர்கள் எதிர்பார்த்த பதிலும் தரத் தயாராகவின்றி சங்கிலிக்குள் தன் தாயின் ஆளூமைத் திறனை அழுத்திச் சொன்னதை புரிந்து கொள்ள முடியா கேள்விகளூடவே நகலுகின்றாள்.

@

திருமணமாகி 15 வருடங்கள் கழித்து மீண்டும் அதே கல்லூரிக்குள் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப் பட்டு வருகை தந்திருக்கின்றாள். கல்லூரி தன் முகங்களில் புதிய சாயங்களை பூசிக் கொண்டிருந்த போதும் அதன் அதே ஆத்மாவை உலவ விட்டபடி இருந்ததை உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் மரம்பட்டு வீசிய காற்றை நுகர்ந்த மாத்திரத்திலேயே உணர்ந்து விடுகின்றாள். அது சஞ்சீவினிக் காற்று போலும் அவளை மெல்ல தூக்கிக் கொண்டு போய் இளமைக் காலத்திற்குள் இறக்கி விட்டுவிடுகின்றது.

இளைமைக் கால உடல் தாங்கியவளாய் கற்பனை மிதப்பில் அரங்கத்தினுள் நுழைக்கின்றாள். வாசலில் சந்தனம் குங்குமம் , பூக்கள் கற்கண்டுகள் வரவேற்கின்றன. அதை விட கூடுதலாக பன்னீர் செம்போட நின்ற மாணவிக்களூக்கிடையில் அவளையும் காண்கிறாள்.நலம் தானா? சிரிப்பினில் அவளையே அவள் விசாரித்தபடி உள்ளே புகுகின்றாள்.

கண்களால் பேசிக் கொள்ளும் மாணவிகள் வண்ணங்களால் வெளிப்படுத்திக் கொள்ளும் உடைகள். ஒவ்வொரு முகத்திற்குப் பின்னும் இன்னுமொரு அழகிய ஆளுமைகள் நகர்வதை ரசித்தபடி நகர்ந்தாள். அரங்கில் இருந்தவர்களோடு வணக்கம் சொல்லி மேடையில் அமர்ந்து விட வரவேற்புரை துவங்குகின்றது.மேடையில் மின்விசிறி ஏற்கனவே இருந்த மார்கழியை வெயிலும் தொலைக்க முடியாது சேர்த்துக் கொண்டு சுழல விரல் நுனியில் குளிர் உறைகின்றது. அருகில் இருந்த ஆசிரியையிடம் மின்விசிறியை நிறுத்திக் கொள்ளலாமே இரகசியக் குரலில் கேட்கின்றாள். ஏன் குளிருதா?

ஆம்

உடம்பில் சக்தி இல்லையென்று அர்த்தம் எனக்கெல்லாம் வியர்க்கின்றது

போர்த்திய பொன்னாடையை விரித்து விர்ல நுனிகளில் மூடிக் கொள்கின்றாள் மெல்லிய சிரிப்போடு.

பெண்ணிய பேச்சுக்கள் போய் கொண்டிருக்க இடைவேளையின் வெளியில் வருகின்றேன் பழைய முகமொன்று கண்ணில் தெரிகின்றது பழகிய முகம்

ஏய் நீ தீபாதானே? இங்கே எங்கே இப்படி?

இன்னைக்கு தமிழ்த்துறையில் நடக்கின்ற கூட்டத்டிற்கு நான் தான் சிறப்பு விருந்தினர்

அப்படியா? ஆச்சரியம் தான். படிக்கும் போது மேடையில பேசமாட்டியே எங்க இருக்கிற

பேச்சு உதடு வழி வந்து கொண்டிருக்க கண்கள் கழுத்தில் வீழ்ந்து வழிந்து கொண்டிருந்தது. கழுத்தில் முத்து மாலை மேல் கண் போய் மீண்டு கொண்டே இருந்தது.

ஆமா படிக்கிற வரைக்கும் மேடையில நான் எதுவும் பேசினதில்லை , ஆடிருக்கேன் , நடிச்சிருக்கேன் .

ஓ எங்கே இருக்கிற பிள்ளைகள் எத்தனை

கேள்விகளும் பதில்களும் நீண்டு கொண்டே போனாலும் சிந்தனையும் பார்வையும் என் கழுத்தைத் தாண்டவில்லை என உணர்ந்து கொண்ட தருணமிதில் அந்தக் கேள்வியும் வந்து விழுந்தது.

கழுத்தில் என்ன தாலியைக் காணோம், புரட்சியா கல்யாணமாகிடுச்சா ஆகலையான்னு கேட்கவா வேண்டமான்னு சந்தேகமா இருக்கு

கேளுங்க அதுனால என்ன ? பதில் சொறேன் என்று சொல்லி விட்டு பதில் சொல்ல விருப்பமற்றே நகலுகின்றேன்

மேடை என் வசமாகின்றது. ஒலி பெருக்கி என்னிடமிருந்து வாங்கித் துப்ப முடியா பேச்சாய் நான் என்னுடன் பேசிய படியே இருக்கின்றேன்.எதிர்த்திருந்த மாணவிகளுக்கு என் விளக்கங்கள் உரத்த குரலாய் கொட்டிக் கொண்டே இருக்கின்றது. அவை என் காதுகளுக்குள் கேட்ட போதும் மனம் இன்னும் வேறேதோ பதில்களை தேடிய படி அலைகின்றது.

“ நான் கல்யாணம் ஆனவளா இல்லையா சொல்வதற்கு தாலிதான் வேண்டுமா? அப்போ ஆண் கல்யாணம் ஆனவனா இல்லையா ? எதை வைத்துச் சொல்லுகின்றோம் ஆனால் உணர்தலோடு தனக்கு திருமணமான விடயத்தை ஒரு ஆணால் தந்து விட முயுமென்றால் அதை விட பொறுப்புணர்வு கொண்ட பெண்களால் முடியாதா என்ன ,தாலி தேவையா?

மனதில் ஓடிக் கொண்டிருந்த கேள்விகள் என் காதுகளில் உரத்துக் கேட்ட போது தான் என் மன உரையும் தொடர் நூலாய் இழுவையோடு வெளி வந்து ஒலி பெருக்கியில் ஓடிக் கொண்டிருக்கின்றது என்று உணர்கின்றேன். பேசிக் கொண்டிருந்த விசயங்களோடு மனத்தின் பேச்சும் சரியான தருணத்தில் கைகோர்த்து விடுகின்றது.

கூட்டத்திலிருந்த மௌன உறைதல் சம்மதமெனும் அடையாளமல்ல ஆழமான சிந்தனையில் உறைந்து போயிருக்கின்றது என்று புரிந்து கொள்ள முடிந்தது. யோசிக்க வேண்டியது தானே எனும் அமைதியில் விதை உறக்கமாய் உறைந்து கிடந்தது அப்பொழுது கீழே முன்வரிசையில் இருக்கும் எனைப் பார்க்கின்றேன் தாலி இல்லா இன்னொமொரு கழுத்து . வாயற்ற கழுத்து ஏளனப் புன்னகையில் என் பேச்சின் முடிவில்கன மௌனம் தாண்டிய கைதட்டலில் துடைத்து எறிந்தது.

****

ஏற்கனவே அது தாலியையும் இப்படி ஒரு துச்சத்தில் தான் கழற்றி எறிந்தது . தாலி விழுந்த கணத்தின் கணத்தை எண்ணிப் பார்க்கின்றது. தாலியற்ரு ஆனால் தாவணி போட்ட நாள் முதலாய் தாய் பன்ணிப் போட்டிருந்த அந்த சங்கிலியில் பூக்கூடை நிறைந்திருந்தது வண்ண வண்ண கற்கள் தங்களிப் பூக்களாய் மாற்ரிக் கொண்டிருந்தன. அடையில் ஓடிய ஒரு கம்பி பாம்பாய் விசமூச்சு வெளி தெரியாது உலவிக் கொண்டிருந்த் சுகமான பொழுதுகள் ஆம் அழுத்தங்கள் மேல் விழுகின்ர வரைக்கும் துப்பப் படுவதில்லை விசங்கள் அதுவரைக்கும் எல்லாமே நல்ல பாம்புகள் தான். அவன் சங்கிலிதான் பாம்பும்

தூரத்தில் கல்லூரிக்குள் அவனைச் சந்தித்த நொடியிஅல் அடிவயிற்றிலிருந்து பந்தொன்று எழும்பி நெஞ்சில் மோதி அழுத்தத் துவங்கியது. ஆனால் விழிகளின் படபடப்பும் நடையின் தயக்கமும் யார் மேல் மேல் விழுந்த் அமோகமோ அவனுக்கு மட்டும் மௌனமாகத் தன் இதயத் தகவலை அனுப்பியதை அவளும் அறிந்திருக்கவில்லை அவனும் அறிந்திருக்கவில்லை

ஒரு நாள் மாலை கல்லூரி மரங்கள் பறவைகளின் இரைச்சல்களை மட்டும் விதைத்துத் தூவிக் கொண்டிருந்த பொழுதினில் அவள் பூக்க்குடை டாலரைப் பற்றிக் கொண்டு அவ்ன் பேசிய குறைந்த வார்த்தையின் இதம் பறவைகளின் கூட்டில் குஞ்சுகளைப் பொரிக்கச் செய்திருந்தது. அவை மெல்ல மெல்ல தாய் மென்று தொண்டையில் அடக்கிய அமுதத்தை தின்று சிறகுகலை துளிர்க்கச் செய்தன. தாய்ப்பறவை அது சிறகு முளைக்கத் துவங்கினதையும் மறந்து ஊட்டிக் கொண்டே இருந்தது அவள் அவன் அவளின் இருப்பை காதலின் மனத்தை மறைசாற்ரித் தீருமட்டும் திணித்துக் கொண்டே இருந்ததைப் போல தன் மேலமர்ந்து காதலைக் திணீத்துக் கொண்டிருந்ததௌ சிறகுகலை அழுத்தித் திணீத்துக் கொண்டிருந்ததை உணர்ந்த பொழுதினில் தன் வீட்டுக்குத் தெரியாமல் வெறுங்கையோடு அவன் வீட்டுக் கதவு தட்டினாள். தெரியும் இந்த நேரம் அவன் நண்பர்களோடு பெருமை பேசி சுத்தி வரும் நேரம் என்று வாசலில் நிற்கையில் சுவரில் இருந்த திருஷ்டி தேங்காய் பூதம் தோழிகளீன் கேலிக் குரலாய் முகம் காட்டியது\

ரொம்ப விளையாட்டாய் உனக்கனாவன் அவன் எனக்கானவன் என்று பேசத் தொடங்கீய விளையாட்டுப் பேச்சுகள் நாங்களே அரியாத இடத்தில் எங்களையே காய்களாக்கி நகர்த்திக் கொண்டிருந்தன\அவன் உனக்கு மட்டுமா ஆளு நேஹ்து கூட மாலதிகூடயும் தனியா கம்யூட்டர் ப்ளாக் பின்னாடி நின்று பேசிக் கொண்டிருந்தான். அவளும் மரத்தில் கை வைச்சிருக்க எப்ப வேஎணுமின்னாலும் கை படலாம் பட்டு கோபப் பட்டா சாரி சொல்லிக் கிடலாம் கண்டும் காணாம இருந்திட்டா அப்படியே நீட்டிக்கலாமுங்கிற மாதிரி தனம் அவன் உடலசைவு முழுக்க தெரிஞ்சதுகெட்டிக் காரந்தான், நல்ல குடும்பம்தான் ஆனா விடலைத் தனம் மாறலியே. யோசிடி சோல்லியபடி நகன்ற தோழியின் வசனம் பூதமாய் மிரட்டிய உண்மையாய் இருந்த போதும் இதோ வாசலில் பயனற்று ஆட விட்டதைப் போன்று தீயிலும் அவள் வசனத்தை தொங்க விட்டபடி நகன்றிருந்தாள்

அவன் செய்கையும் பேச்சுக்களும் இரண்டு மூன்று பெண்களூக்குள் எப்பவும் அவனுக்கான போட்டி இடுப்பதாக பார்த்துக் கொண்டான். போட்டிகளூஉடாக தரையில் கால் ஊன்றாது பெண்களின் இழுத்துக் கட்டிய கயிறுகளின் இழுவையிலேயே மிதக்கும் பாரமாக மாறி மிதந்தான்.

என்னிடமும் இதற்கு முன் இருந்த பெண் நட்புகளெல்லாம் தக்க வைத்துக் கொள்ள அருகதையும் திறமையும் அற்றவர்கள் என முனுமுனுத்தபடி இருக்க என் அருகதையும் இருப்பும் திறமையும் மறைமுகமாக அவனது இருப்பு அவளூல் இருக்குமாறு இருக்க எதிர் திசையிலிருந்தே கொம்பு சீவி விடுகின்றான் ப்புரிகின்ற போதும் உரத்துச் சொல்லி வென்றதாகச் சொல்ல தோற்க வேண்டிய நிர்பந்தங்கள்

இறுதியில் வென்றது அவனை வென்று விட்டதாய் பெருமை பேசித் திரிந்த நாட்களின் சாய முகங்கள் அது கழன்று உதிர்ந்து போவதை காணச் சகியாது மீண்டும் மீண்டும் வண்ணங்களைத் தேடித் தவிக்கிறது. நெருஞ்சியின் மஞ்சள் நிறம் சிவப்புப் பூக்களின் நீலச் சாயம் , உதடுகள் நிறச் சிகப்பு மாற்றித் தரும் பழத் தோல்கள் வண்ணத்துப் பூச்சியில் தொட்டால் ஒட்டிக் கொள்ளும் பட்டு வண்ணத் துகள்கள் எல்லாம் கைவசம் தேடிதேடிச் சேர்த்தாள் இன்னது என்று பிரித்தாரியா முடியா நிறங்களுடன் இப்பொழுது இவள் முகம் ஜெயித்ததாய் சொல்லித் திரிய மனத்திலோ தோற்றுப் போனதின் வலி

வலியைத் திலைக்க இன்றவன் வாசலில் நின்றாள் நின்றதின் அழுத்தம் அந்த வீட்டுக்கு பயம் தர அவன் அழித்து வரப் பட்டான். சூள் கொட்டிக் கொண்டான். நான் பாடுபட்டு வந்து சேர்க்க அதுவாய் வந்து தன் தோளமர்ந்ததாய் பெருமை பேசித் திரிந்தான். என் வெற்றியை அவன் கையகப் படுத்திக் கொள்வஹ்டு தெரிய வர, கழுத்திட்ட தாலி சவன் கம்பியாய் கழுத்திட்டிருந்த போதும் பெரும் பாரமாய் தோன்றத் துவங்கியது, உணர்தலும் பேசுதலும் எப்பவும் தன்னந்தனியாய் என்னோடு மட்டுமே இருக்க பலநேரம் மொழி போதாமலேயே போய் விடுகின்றது.. அதன் போதாமையை உணர்ந்த் அபிறகு பலநேரம் பேச்சே பலனற்றதாய் தெரிய மௌனமும் மன இறுக்கமும் பெரிய ஆறுதலாய் இருந்ததுதன்னோடு பேசிக் கொள்வதின் பழக்கத்தில் வார வாரம் செல்லுகின்ற துர்க்கையம்மன் தோழியாகிப் போனாள். அவளோடு உரத்துப் பேசத் தேவையில்லை. காதில் கேட்கவில்லை என்றோ புரியவில்லை என்றோ திருப்பிக் கேட்காதவள். செவ்வாய்க் கிழமையில் இரண்டாய் அறுத்து பிழிந்து திருப்பிய எலுமிச்சம் பழத்தில் என்னைப் போலவே என்னோடு மௌனமாக உரையாடிக் கொண்டிருந்தாள் துர்க்கை காம்பின் அடிப்பகுதி ஓட்டையில்லாது விளக்கு ஏற்ற ஆடாது அசையாது எரியும் விளக்கில் துர்க்கை என்னோடு பேசிக் கொண்டிருந்தாள். யாராவது அபிசேகம் செய்தி புதுத் தாலி போட்ட அன்று மட்டும் தாலியோடு இருந்தாள் மற்ற நாட்களில் சிவப்பு சேலை கட்டி தாலியற்ற கழுத்தோடு வழியில் சிரித்தபடி இருந்தாள்.

ஆயிற்று திருமணம். வென்று விட்டதாய் நினைத்திருந்த காலங்களீல் குழந்தையின்மை தோல்வியாய் கவ்விக் கொண்டு போனது. எனது தோல்வியில்லை அது என்பது எங்களிருவருக்கும் தெரிந்த போதும் அவனை குறை சொல்லி விடக் கூடாது என்று நான் தயங்கித் தயங்கி நிற்க மெல்ல குறை என் மேலென்று கவியத் தொடங்கியது. நான் அவன் மேல் குறை விழுகக் கூடாதென்று தயங்கியது போல அவன் தயங்காமல் தவிர்த்தது என் மே ப்ழி உறுஹ்டியென்றாகிப் போனது

அவன் குடும்பத்தார் கூடவே இருந்தும் பேச முடியாமலும் என் குடும்பம் தூர இருப்பதால் பேச முடியாமலும் என் தனிமை என்னோடவாகவே ஆகிப் போனது.

காலம் ஒரு கணத்தில் நெகிழ அதில் முளை விட்டது இஅளங்குருத்து\. பாறைக் கசிவுச் செடி முளைத்தலாய் பத்திரப் படுத்தியது சூழல், நிம்மதிப் பெருமூச்சு விட்டு ஆசுவாசப் படுத்திமழலை மூசீல் பேச்சில் திளைத்ஹ்டிருந்த வேளை அவன் படியிறங்கிப் போவதன் வாசம் என் மூக்கு நுகர்ந்து கொண்டே இருந்தது.

படியிறங்கிய போதும் அவன் தீர்மானத்தின் வெற்றியாய் பிரகடனப் படுத்தினான். அவ்ன இப்பொழுதெல்லாம் அழைத்து விடுகின்ற உடன் வேலை செய்யும் தோழிகள் வீட்டின் மையம் வரை வந்திருந்தனர். அது அவர்கள் எல்லை என்று எனக்கு உணர்த்தப் பார்த்த அந்த நொடிகளும் தருணமும் அவை அதை மீறிக் கொண்டு படுக்கையறைக்குள்ளாக நுழைந்திருப்பதை மறைக்கப் பார்ப்பது தெரிந்தது. தெரியாதிருப்பதாய் காட்டிக் கொண்டு விருந்துபச்சாரங்கள் நடத்தப் பட்டுக் கொண்டே இருக்கின்றன.

என் முன்னாலிருந்த அவர்களுக்கிடையேயான தூரங்கள் எந்த இடத்தில் அற்றுப் போகக் கூடும் என்பதும் தெரிந்தே இருந்தது. இதே போல எத்தனை தூரங்களை எனக்கும் அவனுக்குமான போலித் தூரங்களை கல்லூரிக் காலங்களில் அடுத்தவர் எங்களது நெருக்கத்தை உணந்து விடக் கூடாது என்று பொய்யாக உருவாக்கி வைத்திருக்க நடத்தும் திருகு தாளங்களை எனக்கான அன்பாக எத்தைனை காலம் ரசித்திருக்கின்றேன்.

இன்று அது வேறொருத்திகாக என்று மாறித் தொலைய ஒழித்தே வைத்தாலும் ஏற்கனவே நான் நுகர்ந்திருந்த வாசமல்லவா அது . கை காட்ட் அமுடியாத கடியாக மாரி அது விசம் ஏரியும் உயிர்த்திருக்க வேண்டிய கட்டாயங்கள தாலியின் கணத்தை ஏற்றிக் கொண்டே இருந்தது . ஆறுமாதங்களுக்கு ஒரு புது தோழி தோன்றினாள். நான் சாட்சியமிட்டு சொல்ல முடியாத நன்னடத்தைச் சான்றிதழ் தாங்கும் நடவடிக்கைகளைத் தெளிவாகச் செய்தார்கள். மிதிபட்டுக் கூவ முடியாத இடம் ஒவ்வொரு அடுக்காக வெறுப்பாக உருமாறியது. சமீப காலமாக அம்மா வீட்டாருடனான உறவு புதுப்பித்துக் கொண்டது. என்னோடு. நானோ என் இறந்த கால முடிவுகள் நிகழ்காலை வாழ்வாகி எதிர்கால பாதையாகி இருப்பதாக காட்டிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் நிர்ப்பந்தம் தந்த இறுக்கம் கெட்டிக் காரத் தனமாய் வாசிக்கப் பட்டுக் கொண்டிருக்க பாராட்டுகளை நிராகரிக்க முடியா கள்ள மௌனம் குடி கொண்டிஉர்ந்த காலமது. பாராட்டுரைகலை நிராகரித்தால் தோல்வி அடைந்தவளாவேன். ஒத்ஹ்டுக் கொண்டாளும் பட்சத்திலோ அவனின் கள்ளத் தனங்களை கண்ண ப்ருமையாய் வாசித்து விட நேர்ந்து விடும். என் கெட்டிக் காரத் தனம் என்ர வார்த்தைக்கு பின்னால் சிலரின் கயமைத் தனம் தன்னை ஒளித்துக் கொண்டு திரிகிறதே.

குடும்பமோ மகள் தன் தேர்வில் மகிழ்ந்திருப்பதாய் மார் தர்ரிக் கொள்ள இடமளீத்து விட்டு அவனோ தோளமரும் புறாக்கலை பெருமையாய் பேசி மீசை முறுக்கிய படி நகல சிரித்தபடி இரத்தம் வடிதலை சந்தித்துக் கொண்டிருந்தாள் . பொய்யாய் கண்ணீரின் உவர்ப்பை மறைத்த நாட்கள் , தொடர்ந்து சொன்ன பொய்யின் சௌகரியம் அபடியே என் முகமாகிப் போக உவர்ப்பை இனிப்பென்றே இன்னும் சொல்லித் திரிகின்றேன். நான் சொல்லத் தொடங்கிய பொய்யை நானே நம்பத் தொடங்கி விட்டேன். சூழ்ந்திருந்த எல்லாருமே அதை இனிப்பென்றார்கள் என் வாய்மொழியை வழி மொழியாக்கி . தொடக்கத்ஹ்டிலிருந்தே யாருக்கென்றோ கௌரவமென தொடங்கிய காதல் காதலாகவே இல்லாது போய் விட்டது உரைக்க குளிக்கையில் ச்ப்பிட்டு கழுவவென்று கழட்டிய தாலியை திருப்பி எடுத்துப் போட மறந்திருந்தேன்.

அவள் தாலி இல்லாத கழுத்து பற்றி அவன் கவலைப் படத் துவங்க முதன் முறையாய் கவலைப் படத் துவங்குகின்றான் என்பது தந்த மகிழ்ச்சி மீண்டும் முறுக்கேற்ரிறு.. தாலி எடுத்து போட்டுக் கொள்ல மனம் மறுத்துக் கொண்டேயிறுக்க திருப்பதி உண்டியல் காசோடு சேர்த்து வைத்தாள். காசுகள் அதைக் கடத்திக் கொண்டு போய் உண்டியலில் சேர்த்து விட்டதுநானே அறியாப் பொழுதொன்றில் இன்னும் அவன் ஒவ்வொரு கல்யாண வீடு போகும் போதும் தாலி போடச் சொல்லி கேட்டும் கழட்டியதற்கு காரணம் கேட்டபடியும் பதிலை எதிர்பாராது நகலுகின்றான்.

பிறந்த வீடும் சரி புகுந்த் அவீடும் சரி கேட்டால் அதிர்ச்சியான தகவலை தந்து விடுவாளோ என்ற பயத்தில் கேள்விகளை மண்ணிட்டு புதைத்து விட்டுப் போகின்றது. மழை கண்ட ஒரு நாளில் அது முளைக்கலாம்.

என்ன புரட்சியோ கன்றாவியோ என்று ஒரு கூட்டம் சூள் கொட்டியும் போகின்றது அவளது ஆசிரியர் போலவே. காதோடு அருகில் வந்து ஏதும் பிரச்சனையா என்று போலிக் கவலையோடு விசாரிக்கும் தோழிகள் ஒரு புறம்.

அவள் பிரச்சனைக்குள் நாம் நுழையலாமா என்ற தயக்கத் தில் கழுத்தில் காணலியே ஒற்றை வரிக் கேள்வியில் சில ஆண் நண்பர்களும் தூர நின்று கொள்ல என் உணர்வு பேசாத மொழியோடு சுற்றிக் கூட்டமிருக்க

ஒவ்வொரு சொந்தங்களின் திருமண வீத்திற்கும் கோவில்களுக்கும் விருந்தினராய் போகும் போதெல்லாம் ஒரு முறையாவது கேட்டு வைக்கின்றான் கழுத்தில் போட்டுக் கொண்டு வரக் கூடாதாவென்று

எதுவுமே நடக்கவில்லை என்பதாய் மறைத்துக் கொண்டாலும் பேச முடியாத உணர்வு உறுத்தும் தண்டணையைத் தந்து விட்ட மகிழ்வின்

தனிமையில் ஒற்றை நிலவாய் இருந்து கொண்டே இருக்கின்றேன்

Labels:

posted by mathibama.blogspot.com @ 11/04/2011 08:52:00 am   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates