சூரியாள்
|
Sunday, May 24, 2009 |
கவிதை |
அசமம்
கழுகுத் தன் வானப் பார்வையிலிருந்து கேள்வி எழுப்பியது. தட்டையான சமவெளியில் நேராக போகத் தெரியாத நதி பற்றிய எள்ளலை
நெளிந்து நெளிந்து போயிருந்த நதிக்குத் தெரிந்திருந்தது கழுகுப் பார்வையில் காணக் கிடைக்காத மேடு பள்ளங்கள் தழுவலில் மட்டுமே புரியக் கூடிய அசமங்கள் தானெனLabels: கவதை |
posted by mathibama.blogspot.com @ 5/24/2009 10:53:00 pm   |
|
|
|
கவிதை- |
வீழும் வாழ்வு திலகபாமா
நிலம் கீறி உண்மைகளை விதைத்துக் கொண்டிருந்த அவளோ எப்பவும் வறுத்துக் கொண்டிருக்கின்றாள் நாளைய விதைகளின் நீர் சத்தை உறிஞ்ச விட்டபடி உனக்கான சாப்பாட்டுக்காய்
கண்ணாடிக் கூடுகளுக்குள் பாதியில் நிரம்பியிருந்த பொய்களை மீதி உண்மைகளைச் சொல்லி நீ விற்கத் துவங்கிய சுருக்கிய இடங்களுக்குள் எனக்கான இடத்தை காலி செய்திருக்கின்றாய் நான் உள்வர விரும்பவே முடியாத படிக்கு
வாழ்க்கை முடிகின்ற இடத்திலிருந்து எனை நீ சேர்த்துக் கொள்ள நினைக்க
நானோ எப்பவும் உன்னிலிருந்தே துவங்க வடக்கு தெற்கு முரண்பாடுகளூடாகவே ஈர்த்துக் கொள்கின்றோம்
மலையும் பள்ளத்துக்குமிடையில் வீழுகின்ற அருவியாய் எனக்கும் உனக்குமிடையில் வாழ்க்கை வீழ்ந்தபடியே வாழுகின்றதுLabels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 5/24/2009 10:39:00 pm   |
|
|
Saturday, May 16, 2009 |
கவிதை |
உயிரோடு மரணம் தழுவ திலகபாமா
இதுவரை நீ தின்று செரித்த வெளிச்ச இரவுகள் நடந்து கொண்டே வாழ்ந்ததாய் நிறுவிய இருள் பகல்கள்
நட்டதாயும் வளர்ந்து கிளை விரித்தாயும் நிறுவிய புனைவு நிஜங்களை சொர்க்க மென வாசித்த உன்னிடம்
இதுவரை இல்லாதிருந்த சொர்க்கம் கட்டி வைத்து காத்திருந்து வாசிக்க சொல்லி சொர்க்கமென வாசித்துவிடுவாயென நம்புவது நியாயமில்லைதான்
திரிசங்கென என் புதிய வார்த்தையின் முன் பாடம் நடத்தும் நீ தோற்க நான் தொட முடியாததாய் சொல்லித் திரிகின்றாய்
மரண அடிகள் தந்து விட விரும்பாது உயிரோடு சிறைப்பிடிப்பேன் தினம்தோறும் நீ மரணத்தை உணர்வோடு தழுவLabels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 5/16/2009 11:58:00 pm   |
|
|
Saturday, May 09, 2009 |
படித்ததில் பிடித்தது |
கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்திலும் சரி அரசியலிலும் சரி வெறும் உணர்ச்சி வசப் பட்டு பேசக் கூடியவர்களும் எழுதக் கூடியவர்களும் துணிச்சல் மிக்கவர்களாக சொல்லப் பட்டு சொல்லப் பட்டு ஆழ்ந்த சிந்தனை உள்ள கருத்துக்களும் அறிவு பூர்வமான தீர்வுகளும் மௌன அங்கீகரிப்புகளூடவே மறைந்து அல்லது மறக்கப் பட்டு விடுவதும் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றது. அதையெல்லாம் மீறி மிக அரிதாக மிக குறுகிய எல்லைகளுக்குள் கருத்துக்களையும் தங்களையும் சிக்க விடாமல், மனிதனாகக் பிறந்தவன் வாழப் பிறந்தவன் தேச , இன, சாதி, மத, பால் வேறுபாடுகளைத் தாண்டியும், என்பதை கருத்தில் ஊன்றி குறுகிய காலத் தீர்வாக அல்லாது நீண்ட காலத் தீர்வுகளையும் நோக்கி சிந்திப்பவர்களின் கருத்துக்கள் வெளி வரத் துவங்கியிருக்கின்றன. உண்மையில் இவைதான் மிகத் துணிச்சலானவை.வெற்று ஆர்ப்பாட்ட குரல்கள் துணிச்சலான கலகக் குரல்களாக பார்க்கின்ற மனோநிலை, தலித்தியம் பெண்மொழி, இலங்கை அரசியல் எல்லாவற்றினுள்ளும் இன்றைக்கு புகுந்து உண்மையான மனித விடுதலையை நோக்கி நகர்தலை தடுத்து விடுகின்றது.அதைத் தாண்டி மிக அரிதாக வெளி வருகின்ற சிந்தனைகளாக புது விசையில் வந்திருக்கின்ற சுசீந்திரனின் நேர்காணல் பேசி பகிர்ந்து கொண்டு பலருக்கும் கடத்த வேண்டிய முக்கிய நேர்காணல்.
"மன்னிக்க வேண்டும், நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும் என்னால் சொல்ல முடியவில்லை..." -நடராசா சுசீந்திரன் பல இணைய தளங்களும் இந்நேர்காணலை பிரசுரித்திருக்கின்றன. அவற்றுக்கும் எனது நன்றிகள்
நேர்காணலை வாசிக்க:
Labels: நேர்காணல் |
posted by mathibama.blogspot.com @ 5/09/2009 07:22:00 am   |
|
|
Friday, May 08, 2009 |
கவிதை |
கத்தியின்றி இரத்தமின்றி வன்முறை திலகபாமா
வன்முறை குண்டு துளைப்பும் குருதி இழப்பும் மட்டுமல்ல
என் அன்பின் சுகங்களை எல்லாம் அனுபவித்து விட்டு நீ திருப்பித் தராததின் வலியைச் சொன்னால் நிராகரிக்கும் உன் இயல்பில்
யாருமற்ற ஏதுமற்ற அகதி வாழ்வின் வலியும்
எனை கெட்டிக் காரியென சொல் தூவி உனக்கானவளாய் மாற்றிக் கொள்ளும் தொடர் வாழ்வில்
பதுங்கு குழிக்குள் ஒளிந்து கொள்ளும் மூச்சுத் திணறலின் வலியும் வன்முறைதான் நன்றி .திண்ணை.காம்Labels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 5/08/2009 12:32:00 pm   |
|
|
Sunday, May 03, 2009 |
புத்தகச் சந்தை |
புத்தகச்சந்தை திலகபாமா
விடுதலை பேசிய வார்த்தைகள் புத்தகச் சந்தையில் அடுக்கப் பட்டிருந்தன
“கழிவு” களை அழுத்திச் சொல்லி தங்களை வாங்கி விடக் கோரிக் கொண்டிருக்கின்றன
தாள்களுக்குள் தீர்மானிக்கப் பட்டு திணிக்கப் பட்ட மொழிகள் கருத்தியல்களை வெளித்தள்ளியிருக்க அவை கால்மிதியடிகளின் துளைகளுக்குள் ஒளிந்து கொள்கின்றன
கூடிக் களிக்க சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருந்த நண்டுகள் எழுத்துக் காடுகளுக்குள் மாறி நுழைந்து விட்டதையும் மறந்து முட்டைகளை தொலைத்து விட தேடித் திரிகின்றன மறைவுகளை
இதுவரை உண்மை பேசிய பழமிதழ்கள் கடைகள் கிடைக்காமல் சந்தைக்கு வெளியில் பரத்திக் கிடக்கின்றன விற்க நேர்ந்துவிட்ட கிழவனால்
சமாதானம் உருவாக்க விளைந்த எழுத்துக் காடுகள் தீப்படித்தலைகின்றன
தாகம் தீர்க்கத் தோன்றிய மொழிக் குளங்கள் தற்கொலைகளை மூழ்கடிக்கின்றன
விடுதலையைக் கோரிய சிறகுகள் படுக்கையறைக் கூண்டுகளில் சாட்சியாகிப் போய் விட்டன
விற்று முடித்த மாலையில் புழுக்கைகளையே விட்டு விட்டு நகலும் சந்தையை கூட்டிய படி சிரிக்கின்றாள் குமரித் தோற்றம் தொலைக்கா ஔவை
மூடிய கதவுகளுக்கப்பால் ஒருவனை ஒருத்திகளும் ஒருத்தியை ஒருவன்களும் திருடியதை மறைத்தபடி மகிழ்ச்சியில் மறைவதை பார்த்து சிரித்தபடிLabels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 5/03/2009 06:32:00 pm   |
|
|
|
|
 |
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|